ஈரோடு இடைத்தேர்தல்: ’அண்ணாமலை வெத்துவேட்டு...காங்கிரஸ் வேட்பாளர் யார்?’ ஈவிகேஎஸ் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை ஒரு வெத்துவேட்டு என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும் எனக் கூறியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 21, 2023, 04:05 PM IST
  • ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்?
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் பேட்டி
  • அண்ணாமலை வெத்துவேட்டு எனவும் சாடல்
ஈரோடு இடைத்தேர்தல்: ’அண்ணாமலை வெத்துவேட்டு...காங்கிரஸ் வேட்பாளர் யார்?’ ஈவிகேஎஸ் பேட்டி  title=

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி..கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்னதற்கு நன்றி. காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாளில் காங்கிரஸ் தேசிய தலைமை அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை.

மேலும் படிக்க | இடைத்தேர்தல்: 'நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்' - ஓபிஎஸ்

இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். இளைய சமுதாயத்தை சார்ந்தவர்கள் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் நிற்கவைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் சொன்னதால் இளைய மகனுக்காக கோரிக்கை வைத்துள்ளேன். கட்சியில் மற்ற சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனவே காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுப்பார்கள். தலைமை எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.

அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அதிமுகவிடம் ஒற்றுமை இல்லை. குழப்பத்தில் இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் சசிகலா என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 4 பேரும் சேர்ந்து வந்தாலும் தனித்தனியாக வந்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். காங்கிரசுக்கு சவால் இருக்கிறது என்று சொல்ல முடியாது. 

திமுக கூட்டணியும் இருப்பதால் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. பாஜக ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனை போன்றது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக சொல்வது பொய். மூன்றாவது இடம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தான். அகில இந்திய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மாவட்ட கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையும் பாஜகவும் வெத்து வெட்டு என்பது இந்த தேர்தலில் தெரியும்" என பேசினார்.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்; தேர்தல் அலுவலர் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News