மனித நாகரிகம் நதியில் இருந்து உருவாகியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நதியை நம்பியே இந்தியச் சமூகங்களின் வேளாண்மை கிடக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நதிகளைக் கொண்டாடாத இலக்கியங்களே இல்லை என்று சொல்லலாம். சங்க இலக்கியம் உட்பட நவீன இலக்கியம் வரை தமிழகத்தின் காவிரியைப் பற்றிச் சொல்லாத குறிப்புகள் ஏது?!.
அப்படிப்பட்ட நதியை பாதுகாப்பது என்பது மனித சமூகத்துக்கு கடமை இல்லையா. நம்மோடு முடிந்துவிடப்போகிறதா என்ன இந்த தலைமுறை, எல்லாவற்றையும் நாசமாக்குவதற்கு. மனிதனின் பேராசையின் விளைவாக ஒவ்வொரு நதியும் வன்கொடுமை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா
ஏற்கனவே, மண்ணைத் திருடி நதியின் ஓட்டத்தை முடமாக்கிய நிலையில், அதில் ரசாயனக் கழிவுகளையும் கலந்து துன்புறுத்துவது வெட்கக்கேடானது. என்ன நடக்கிறது தென்பெண்ணையாற்றில் ?
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 781 கன அடியாக உள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையில் 40.66 அடி நீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 908 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரைகள் அதிக அளவு செல்கிறது.
ஓடும் அழகான ஆற்றில் ரசாயக் கழிவுகள் அதிக அளவுப் பொங்கி வழியும் காட்சியை சகித்துக் கொள்ளவே முடியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இரசாயன கழிவுநீர் கலந்து வருவது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்குள் மறுபடியும் தொழிற்சாலைகளின் கழிவுநீரை ஆற்றில் கலந்துவிடுகின்றனர்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், யாராவது தாய்ப்பாலில் விஷத்தைக் கலப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | அதிகாரம் எதுவுமற்ற ‘பல்’ இல்லாதது காவிரி மேலாண்மை ஆணையம் - வைகோ சாடல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ