டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் - போலி பத்திரிகையாளர் கைது!

சென்னையில் அரசு டாஸ்மாக் கடை ஊழியரை மிரட்டி பணம் கேட்ட போலி பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 04:33 PM IST
  • பத்திரிகையாளர் போர்வையில் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு
  • போலி மதுபானம் விற்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல்
  • போலி பத்திரிகையாளரை கைது செய்த மணலி போலீஸார்
டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் - போலி பத்திரிகையாளர் கைது! title=

சென்னை மணலி காமராஜர் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு டிப் டாப் உடையணிந்து வந்த 58 வயது மதிக்கத்தக்க நபர் தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், கடையில் போலி மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் ரஞ்சித் என்பவரிடம் கடையின் மேலாளர் எங்கே அவரை உடனடியாக பார்க்க வேண்டும் என அதிகார தொனியில் பேசியதாக தெரிகிறது. 

இதனால் பதற்றமடைந்த கடை ஊழியர் ரஞ்சித் மேலாளர் ரவி என்பவருக்கு போன் செய்து வந்திருக்கும் நபர் பற்றி தெரிவித்துள்ளார். அந்த நபரின் பேச்சில் சந்தேகம் அடைந்ததால் நடந்தவற்றை பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் நல சங்க பொதுச்செயலாளர் தனசேகனிடமும் கூறியுள்ளார். பிறகு அவரின் புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் தனசேகரனுக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் படிக்க | காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

உடனடியாக அந்த புகைப்படத்தை டாஸ்மாக் ஊழியர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர அந்த நபர் சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பது தெரியவந்தது. இவர் பத்திரிகையாளர் என கூறிக்கொண்டு பல்வேறு டாஸ்மாக் கடைகளில் மிரட்டி பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மணலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விஜயபாஸ்கரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜயபாஸ்கர் ஒரு போலி பத்திரிகையாளர் என்பது அம்பலமானது. மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பதையே இவர் வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதுபோன்ற போலி பத்திரிகையாளர்கள் சிலர் டாஸ்மாக் கடைகள், தாசில்தார் அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர் போர்வையில் வசூல் வேட்டையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News