Thotta Dharani Artworks Exhibition: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID) வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் தொடர்பான வணிகம் உள்ளிட்டவற்றை குறிக்கும் நிறுவனம். மேலும் IIID வெள்ளி விழாவின் சிறப்பம்சமாக புகழ்பெற்ற கலை இயக்குனரான பத்மஸ்ரீ தோட்ட தரணியின் அபாரமான படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் தோட்டா தரணி பணியாற்றியிருக்கிறார். பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நத்தி விருதுகள் என பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றிருக்கிறார் .
துடிப்பான வண்ணங்களின் கலவை முதல் மோனோக்ரோம் வரையிலான நிறங்களின் தனித்துவமான பயன்பாடு, அவரது கூரிய கவனிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் இணைந்து, அவரது அரிய திறமையை இந்த கண்காட்சி எடுத்துக்காட்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
நான்கு தலைமுறை அனுபவங்களைக் கொண்ட தோட்டா தரணி, கலைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும். குறிப்பாக சினிமா செட் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை சுவரோவியங்களில், சென்னையை தாண்டி அகில இந்திய அளவில் ஒரு அழியாத முத்திரையை பதித்தவர் தோட்டா தரணி.
கண்காட்சியின் நேரம்...
இந்த கண்காட்சி பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் எனவும் இதற்கு கட்டணம் இல்லை என்றும் IIID நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில், ஜிஆர்டி ஹோட்டல்ஸ் சிஇஓ விக்ரம் கோட்டா, ஹம்சத்வனி துணைத் தலைவர், முன்னாள் செயலாளர் FICCI FLO,கவுன்சில் உறுப்பினர் WICCI ரச்சனா குமார், கட்டிடக்கலை வடிவமைப்பாளர் மற்றும் ரெயின்-ஸ்டுடியோ ஆஃப் டிசைனின் இணை நிறுவனர் வம்சி கிருஷ்ணா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக IIID- CRC தலைவர் Ar. PA. ரவி, IIID- CRC கௌரவ செயலாளர் தர்மேஷ் மேத்தா, அலையன்ஸ் ஃபிரான்சைஸ் மெட்ராஸின் இயக்குனர் பாட்ரிசியா தெரி ஹார்ட் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து...
IIID இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 10,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு முப்பத்தி நான்கு சேப்டர்கள் மற்றும் மையங்களுடன், சமகால சவால்களுக்கு ஏற்ப, நாட்டின் பரப்பை வடிவமைப்பதில் IIID முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த IIID வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை சேப்டர் வடிவமைப்பு சங்கமங்கள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நேரடி பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளது. கூடுதலாக,தனித்தன்மை வாய்ந்த 'நம்ம சென்னை' என்கிற தலைப்பில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பொது இடங்களை வடிவமைக்க உள்ளது.
மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்! வேறு சேனலுக்கு செல்கிறாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ