ரூபாய் நோட்டில் அஜித் படம்! துணிவு டிக்கெட்டில் அசத்தும் அஜித் ரசிகர்கள்!

Pongal 2023: பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று 'துணிவு' படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Jan 8, 2023, 01:54 PM IST
  • துணிவு படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது.
  • புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
  • ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
ரூபாய் நோட்டில் அஜித் படம்! துணிவு டிக்கெட்டில் அசத்தும் அஜித் ரசிகர்கள்! title=

2023ம் ஆண்டு வரப்போவது வாரிசு பொங்கலா அல்லது துணிவு பொங்கலா என்று பெரிய யுத்தமே நடந்து வருகிறது.  தனது நடிகர்களுக்கு ரசிகர்கள் பலரும் விதவிதமாக வீதியெங்கிலும் கட் அவுட்டுகள் வைத்து அலப்பறை செய்து வருகின்றனர்.  நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.  வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார்.  இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், அமீர், பாவ்னி, சிபி சந்திரன் மற்றும் மமதி சாரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்! 

ஜிப்ரான் இசையில் 'துணிவு' படத்தின் பாடல்கள் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்காகியுள்ளது.  இப்படத்தில் 13 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளது மற்றும் வடக்கன் என்று வட இந்தியர்களை கேலி செய்யும் விதமாக இடம்பெற்றிருந்த வார்த்தையும் திருத்தியமைக்கப்பட்டு இருக்கிறது.  ஆரம்பத்தில் 'துணிவு' படம் ஜனவரி 12ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படம் ஜனவரி 11ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 

pollachi

'துணிவு' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது, இந்நிலையில் பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று 'துணிவு' படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்தின் 'துணிவு' படம் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்படுகிறது,  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தை காண ரசிகர்கள் பல்வேறு விதமாக நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.  பொள்ளாச்சியில் வால்பாறை சாலையில் உள்ள தங்கம் தியேட்டரில் 'துணிவு' படம் வெளியாகவுள்ளது.  இதை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல் டிக்கெட் அடித்து முதல் நாள் காட்சிக்கு ரசிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்,  டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும்  படிக்க | அஜித்தை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது - துணிவு இயக்குநர் ஓபன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News