தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் வந்தது புதிய திட்டம்... இனி பணம் செலுத்துவதும் ஈஸி தான்!

Ration Shop Updates: தமிழ்நாட்டில் முதல் முறையாக ரேசன் கடைகளில், 2 கிலோ ராகி வழங்கும் திட்டமும், கியூ-ஆர் கோட் மூலம் ரேசன் பொருட்களை பெறும் திட்டமும் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2023, 06:41 PM IST
  • பல்வேறு துறை அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
  • 2 கிலோ ராகி, நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் முதல்கட்டமாக வழங்கப்படுகிறது.
  • கியூ-ஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் திட்டம் நீலகிரியில் மட்டும் அறிமுகம் தற்போது உள்ளது.
தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் வந்தது புதிய திட்டம்... இனி பணம் செலுத்துவதும் ஈஸி தான்! title=

Ration Shop Updates: ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மாநிலத்தில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யும் அளவிற்கு ராகி இல்லாததால் முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய்யபட்டது. 

அதன்படி உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் இன்று (மே 6) தொடங்கி வைக்கப்பட்டது. அதில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர். அதேபோல, தமிழ்நாட்டில் முதல் முறையாக பணம் இன்றி கியூ-ஆர் கோடு மூலம் பணத்தை செலுத்தி ரேசன் பொருட்களை வாங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர். 

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,"தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க முடிவு செய்து அதை தர்மபுரி மாவட்டத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் மாதிரி திட்டமாக தொடங்கி வைத்துள்ளோம். 

 இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 419 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தர்மபுரி மாவட்டத்தில் நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 465 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக க்யூ-ஆர் கோடு மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்வதற்காக க்யூ ஆர் கோட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமான உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 14 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரைக்கும் திறன் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 376 அரிசி அரவை ஆலைகள் இருந்தது. தற்போதைய தமிழ்நாடு அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் அதனை 747 ஆக உயர்த்தி இருப்பதுடன் அரைக்கும் திறனை 10 லட்சம் டன்னாக உயர்த்தி உள்ளது. மேலும் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ. 238 கோடி மதிப்பில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் சேமிக்கும் விதமாக கிடங்குகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண் துறை மூலம் 7 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டுள்ளது" என்றார். 

மேலும் படிக்க | ரேஷன் கடை பயனாளிகளுக்கு நல்ல செய்தி... புதிய விதியை கொண்டு வந்த மத்திய அரசு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News