திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட வட்டாரங்களில் நடப்பு ஆண்டில் 64 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில்தான் அந்தந்த பகுதி விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் சிரமங்களை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | "சீமைக் கருவேலம் மரங்கள்" - தமிழக அரசின் புது இலக்கு..!
கடந்த சில வாரங்களாகவே இந்த ஆன்லைன் பதிவு என்பது நிறுத்தப்பட்டு இருந்ததால் விவசாயிகள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இரண்டு நாட்களாக ஆன்லைன் பதிவு மீண்டும் திறக்கப்பட்டது. திடீரென பதிவு செய்யும் முறை திறப்பதும், திடீரென பதிவு செய்யும் முறை மூடுவதுமாக இருப்பதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். இதனால், எப்போது பதிவு செய்யும் நேரம் சரியாக இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பதிவில் குளறுபடிகள் இருக்கும் போது ஆன்லைன் பதிவுக்கு மாற்றாக விவசாயிகள் ஒரு யோசனையை முன்வைத்துள்ளனர். அதாவது, ஆன்லைன் பதிவுக்குப் பதிலாக நேரடியாக கிராம நிர்வாக அலுவலர்களின் மூலம் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதிலும் 64 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள போதிலும், நெல்லை பதிவு செய்ய விவசாயிகள் அல்லல்படுகின்றனர். உதாரணத்துக்கு, ஆன்லைன் மூலம் பதிவு செய்தால், தங்களது இடத்தில் இருந்து வேறு இடம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை விற்பதற்காக விவசாயி ஒருவர் ஆன்லைனில் பதிவு செய்தால் அந்த விவசாயிக்கு அவரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் பதிவாகாமல், பல கிலோ மீட்டர் தூரம் உள்ள வேறு இடத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | விவசாயத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் - வேளாண் அமைச்சகம்!
இதனால் வேறு இடத்தில் உள்ள வியாபாரிகள் பயனடையும் நிலை உள்ளதாகவும், ஆகவே நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டுமே அந்தந்த பகுதி நெல் கொள்முதல் நிலையங்கள், நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR