"சீமைக் கருவேலம் மரங்கள்" - தமிழக அரசின் புது இலக்கு..!

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக  அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 5, 2022, 11:23 AM IST
  • 700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள சீமைக் கருவேலம்
  • 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த புது இலக்கு
  • உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
"சீமைக் கருவேலம் மரங்கள்" - தமிழக அரசின் புது இலக்கு..! title=

சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழக முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியுள்ளதாகவும், இதில் 23 வகையானவை உடனடியாக கவனம் செலுத்தி அப்புறப்படுத்த வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இவற்றை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டத்திற்காக 5 கோடியே 35 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Seemai karuvelam

முதல்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்களிலும், தர்மபுரி பகுதியிலும் உள்ள 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவது என முதல்கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான மரங்கள் மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உள்வாங்கிய கடல்.!

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக  அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வேலூரா வெயிலூரா... அடம்பிடிக்கும் சூரியன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News