வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் அடுத்த பலராமன் தெருவை சேர்ந்தவர் துரைவர்மன். புகைப்பட கலைஞராக இருந்த இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எலெக்டிரிக்கல் இருசக்கர வாகனம் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த வாகனத்திற்கு இவர் நேற்று இரவு ஜார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வாகனத்தில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இந்த தீ பக்கத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும் பிடித்து அடுத்தடுத்து வீடு முழுவதும் பரவியுள்ளது. இதையடுத்து அவர் வெளியில் தப்பிக்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தாலும், புகை மூட்டத்தை தாக்கு பிடிக்க முடியாததாலும் துரைவர்மன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தனது 13 வயது மகள் ப்ரீத்தியை அழைத்துக்கொண்டு கழிவறைக்குள் சென்று அமர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | மார்ச் 28, 29ல் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! - தமிழக அரசு
சற்று நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய தந்தையும் மகளும் தொடர்ந்து தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீயை அணைத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை மகள் உயிரிழந்துள்ள சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் பொதுமக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ள நிலையில் இதுபோன்ற விபத்துக்கள் பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR