J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடற்கரையில் ஓய்வெடுக்கத் தொடங்கி சில ஆண்டுகளே கழிந்திருக்கிறது. இன்று புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி ஜெ.ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2021, 06:59 AM IST
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று
  • கோவில் கொண்ட தெய்வமாய் மாறினார் அம்மா ஜெயலலிதா
  • திரைப்படத்துறையிலும், அரசியலிலும் கோலோச்சிய தங்கத் தாரகை செல்வி ஜெ.ஜெயலலிதா
J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது title=

புதுடெல்லி: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடற்கரையில் ஓய்வெடுக்கத் தொடங்கி சில ஆண்டுகளே கழிந்திருக்கிறது. இன்று புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி ஜெ.ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்...

கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் பிறந்து, சென்னை மெரீனா கடற்கரையில் அடங்குவதற்கு இடையிலான தனது வாழ்நாளில் அவர் செய்த சாதனைகள் பல. அவர் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல, மறைவுக்கு பிறகும் இன்றும் என்றென்றும் நினைவில் இருப்பார். 

ஒரு முதலமைச்சருக்கு நான்கு நாட்களில் மூன்று முக்கிய நினைவிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஜெயலலிதாவுக்கு (J.Jayalalitha) மட்டுமே இருக்கும். 

Also Read | இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா

சென்னையில் இரு நினைவிடங்கள் என்றால், மதுரையில் ஆலயம். அம்மா என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தெய்வமாக கோவிலில் வீற்றிருந்து அன்னை ஜெயலலிதாவாக உயர்ந்துவிட்டார்.   

பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 6 முறை ஆட்சியமைத்த பெண் முதலமைச்சர் என்றால் அது ஜெ.ஜெயலலிதா மட்டுமே.  

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. நடிகையாக தங்கத் தாரகையாக வெள்ளித் திரையில் உலா வந்துக் கொண்டிருக்கும்போதே, 1981ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.  கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், மாநில முதலமைச்சர என அவரது வெற்றிப் பயணம் தேக்கமின்றி தொடர்ந்தது.

Also Read | ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து, மாணவர்கள் நூதன முறையில் போராட்டம்..!!

மொழிப்புலமையால், ஆங்கிலப் பேச்சால், அனைவரையும் மயக்கும் திறமை பெற்ற ஜெயலலிதாவின் முனோடி இரும்புப் பெண்மணி, இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி.

 8 முறை தேர்தல்களில் போட்டியிட்ட ஜெயலலிதா ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்தார். 1996ஆம் ஆண்டு பர்கூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது,  தி.மு.க வேட்பாளர் ஈ.ஜி.சுகவனத்திடம் தோற்றுப் போனார். ஆனால் தனது தோல்வியை வெற்றிப் படிகட்டாக மாற்றி யாரும் அடைய முடியாத உச்சத்தை அடைந்தார் டாக்டர் ஜெ.ஜெயலலிதா.
 
2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையும் பலனளிக்காமல் போக, டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

Also Read | ரஜினியின் கனவு வெற்றி பெறுமா? அரசியலில் நுழைந்து தமிழக முதல்வரான 4 திரைப்பட நட்சத்திரங்கள்

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள  ஜெயலலிதாவின் மணிமண்டபம் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையின் குணாதிசயங்களைக் கொண்டவர் ஜெயலலிதா என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொண்ட நிதர்சன உண்மை.

தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கத்திற்கு முடிவு கட்டிய
ஜெயலலிதாவின் பிறந்தநாள், தமிழ்நாட்டில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read | இதய தெய்வமாக சரித்திரம் படைத்து கொடுத்துச் சிவந்த கரங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News