சேலத்தில் கோர விபத்து வீடியோ: மாணவி உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்

எடப்பாடி அருகே நடைபெற்ற பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2022, 04:37 PM IST
  • பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
  • 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
சேலத்தில் கோர விபத்து வீடியோ: மாணவி உயிரிழப்பு - 40 பேர் படுகாயம் title=

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோழிப்பண்ணை என்ற இடத்தில் நேற்று சாலை விபத்து நடைபெற்றது. இதில் கல்லூரிப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் தனியார் பேருந்து மற்றும் கல்லூரிப் பேருந்தில் பயணித்த மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் என 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!

விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதியில் திரண்ட மக்கள், படுகாயமடைந்தவர்களை எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த இடத்தில் சில மணி  நேரங்கள் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர். 

விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், மழை பெய்ந்து ஓய்ந்த நேரத்தில் தனியார் பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. எதிரே வாகனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில், திடீரென எதிரே கல்லூரிப் பேருந்து சாலையின் நடுவே வந்துவிடுகிறது.

மேலும் படிக்க | ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகிய 2வது மனைவியை அடித்து கொலை செய்த 3வது கணவர்

கணப்பொழுதில், தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. பதறவைக்கும் இந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை உலுக்குகிறது. காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News