யானைபலம் கொண்ட கஜா புயலின் வேகம் குறைந்துள்ளது: IMC

சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுக்ள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 10:24 AM IST
யானைபலம் கொண்ட கஜா புயலின் வேகம் குறைந்துள்ளது: IMC title=

சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுக்ள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  பின்னர் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம் இதுகுறித்து கூறுகையில், ‘‘கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது என்றும் சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15 ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளது.

 

Trending News