கோட்சே ஆதரவாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை!

Local Body Election Result in Chennai: விமர்சனங்களை புறம் தள்ளி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்த 134வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை பெற்று வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 22, 2022, 07:04 PM IST
கோட்சே ஆதரவாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை! title=

சென்னை: கோட்சேவுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் சென்னை மாநகராட்சி 134வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை பெற்று வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கி வீடு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட உமா ஆனந்தன் மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்துள்ளது என்பதற்கான சான்றாக முன்னிலை வகித்து வருகிறார். தமிழகம் முழுவதும் பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உமா ஆனந்தனுக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தலில் போட்டியிட்டது பலரை வியப்பிலும் ஆழ்த்தியது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை பாஜக சந்தித்தது. மேலும் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன், அவர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்தித்தது.

மேலும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல்: இவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்ட உமா ஆனந்தன் தொடர்பாக சர்ச்சை எழுந்ததற்கு முக்கியக் காரணம், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், "கோட்சே காந்தியை சுட்டது அவரது நியாயம். அவர் ஒரு இந்து. அதனால்தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் கோட்சே ஆதரவாளர் என்பதில் பெருமைப்படுகிறேன்" என்று பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள இணையவாசிகள், கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவருக்கு சீட்டா என கொந்தளித்தனர். 

ஆனாலும் விமர்சனங்களை புறம் தள்ளி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். இன்று தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், அவர் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என செய்திகள் வெளியாகின. அதை கொண்டாடும் வகையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை, வதந்தி என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் வார்டு 134 இல் பாஜக வேட்பாளரான உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை வகித்து வருகிறார் எனத் தகவல்.

கடந்த 19 ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர் இல்லாத மன்றமாக மாறிய சின்னாளப்பட்டி பேரூராட்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News