ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சோலைமணியை அமெரிக்கா கொன்ற பின்னர் 24 காரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 41,000 ரூபாயை எட்டியுள்ளது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரில், இரான்நாட்டு புரட்சிப் பாதுகாப்புப் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், இரான்-அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கம் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. சோலைமானியின் மரணத்திற்குப் பிறகு மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகளில் பெருமளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பண்டிகைக்கால விற்பனை காரணமாக 10 கிராம் தங்கம் விலை 40,000 ரூபாயைத் தொட்டது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் இறுதியில் 39,000 ரூபாயாக இறங்கியது. போர்ப்பதற்றம் தொடரும்வரை இந்த விலையேற்றம் தொடருமென்றும் தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ஈரான் அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டதுமே தங்கம் விலையில் அதிரடி ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று 10 கிராம் தங்கம் விலை 740 ரூபாய் அதிகரித்து 41,070 என்ற விலையை எட்டியுள்ளது. சென்னையில் 10 கிராம் தங்கம் விலை ரூ.41,380 ஆக உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.