மே 30 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர் அலுவலகம் வர மே 30 வரை விலக்கு

கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 25, 2021, 11:17 AM IST
  • ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர விலக்கு.
  • மே 24 காலை 4 மணி முதல் மே 31 காலை 6 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
  • ரேஷன் கடைகள் (Ration Shop) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும்.
மே 30 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர் அலுவலகம் வர மே 30 வரை விலக்கு title=

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து, மு.க. ஸ்டாலின் (M.K. Stalin) தலைமையிலான தமிழக அரசு மே 24 காலை 4 மணி முதல் மே 31 காலை 6 மணி வரை தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகமும் முழுவதுமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர் அலுவலகம் வர விலக்கு

அதேபோல நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 34,867 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 404 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872-ஐ எட்டியுள்ளது. கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,01,580 ஆக உள்ளது.
 
ALSO READ |  தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு: 404 பேர் உயிர் இழப்பு!!

நேற்று 27,026 பேர் COVID தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இந்த கொடிய தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 15,54,759 ஆக உயர்ந்துள்ளது.

TN Statement

தமிழகத்தில் நேற்று முதல் அடுத்த ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அவசியமின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை என அரசு  எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் முழு ஊரடங்கு (Full Lockdown in Tamil Nadu) உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பொது மக்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். 

இந்த ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் (Ration Shop) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ALSO READ |  முழு ஊரடங்கில் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News