தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (Local Body election) நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் ஒவ்வொரு இடத்திலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ | 5 நிமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திய அமித்ஷா..!
இந்நிலையில் ஊட்டிக்கு (Ooty) அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சி பகுதியில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த பறக்கும் படை குழுவில் அரசு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடம் பெற்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெண் காவலர் ஒருவரிடம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் பாபு(35) என்பவர் சில்மிஷம் செய்துள்ளார்.
ALSO READ | தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது
இதையடுத்து அந்த பெண் காவலர் பணி நேரத்தில் தனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண் காவலரின் புகாரை ஏற்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் துணை வட்டாட்சியர் பாபு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் உண்மைதான் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் துணை வட்டாட்சியர் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விசாரணையில் பாபுவும் தான் செய்துகொண்ட தவறை ஒத்துக்கொண்டார். பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் துணை வட்டாட்சியர் பாபுவை கைது செய்த போலீசார் அவரை குன்னூர் சிறையில் அடைத்தனர். இவ்வாறு தேர்தல் பணியின் போது ஒரு அரசு அதிகாரியே, காவல் பணியில் ஈடுபடும் பெண் காவலரிடம் சில்மிஷம் செய்து கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR