புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருக்கிறோம் -புதுவை!

புதுவையில் இருந்து சொந்த மாநிலம் திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 12, 2020, 06:23 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருக்கிறோம் -புதுவை! title=

புதுவையில் இருந்து சொந்த மாநிலம் திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., அண்டை மாநிலங்களான தமிழ்நாட்டில் கொரானா தொற்று தற்போது அதிகரித்து வருகின்றது.  இதனால் நமது புதுச்சேரி மாநில மக்களை காப்பது கடமை என்றும் இந்த நோய்த்தொற்று எவ்வாறு வருகிறது எப்படி வருகிறது என்று தெரியவில்லை. திடகாத்திரமாக இருப்பவர்கள் கூட இந்த தொற்று உள்ளது.

இப்போது நாம் கொரானா தொற்று இரண்டாவது காலகட்டத்தில் இருக்கின்றோம். மூன்றாவது கட்டமாக மாறினால் அது சமூக பரவலாக மாறும். சமூக பரவலாக மாறினால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொற்று உள்ளவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

4-வது முறையும் ஊரடங்கு நீட்டிப்பதாக பிரதமர் பேச்சில் தெரிகிறது.  புதுச்சேரியில் 4-வது முறையாகும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தளர்வுகள் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அவர்கள் மாநிலத்திற்கு செல்வதற்கான செலவை நாங்கள் ஏற்க தயாராக இருக்கின்றோம். கொரானா நோய் என்பது கொடிய நோயாக உள்ளதால் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News