ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி சாத்தியம்: ப. சிதம்பரம் விளக்கம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2019, 11:57 AM IST
ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி சாத்தியம்: ப. சிதம்பரம் விளக்கம் title=

2019 மக்களவை தேர்தலை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு "குறைந்தபட்ச வருவாய் திட்டம்" அறிவித்தார். இது "ஏழ்மையை ஒழிக்கும் பணப்புழக்க விவேக திட்டம்" ஆகும். குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும். இந்த திட்டத்தால் 20 சதவீத ஏழைகள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் 5 கோடி குடும்பத்திற்கு வருவாய் கிடைக்கும். இதன்மூலம் குடும்ப தலைவிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என ராகுல்காந்தி அறிவித்தார்.

இந்த திட்டத்தை பலர் இது எப்படி சாத்தியாமாகும். கடந்த தேர்தலில் பிரதமர் மோடி அனைவரின் கணக்கில் 15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால் இதுநாள் வரை எங்கள் கணக்கில் ஒரு ரூபாய் கூட வரவில்லை. தற்போது ராகுல்காந்தி அறிவித்துள்ள "குறைந்தபட்ச வருவாய் திட்டம்" எப்படி சாத்தியமாகும் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னால் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம், "குறைந்தபட்ச வருவாய் திட்டம்" எப்படி சாத்தியமாகும் என்று விளக்கம் அளித்தார். 

அவர் கூறியதாவது:

> ஏழைக் குடும்பங்களுக்கு 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும்.

> ஏழைகள் அடையாளம் காணப்பட்டு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதன்மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.

> இந்த திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

> இந்த திட்டத்தால் நாட்டில் வாழும் சுமார் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும்.

Trending News