Thaipoosam Holidays Special Trains: ஜனவரி மாதம் என்றாலே அது விடுமுறைகளின் மாதம் எனலாம். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு தினம், பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம் என அடுத்தடுத்த விடுமுறைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரே குஷிதான். இந்த விடுமுறைகளுடன் சனி, ஞாயிறும் ஒத்திசைந்து வரும்பட்சத்தில் ஒரு நீண்ட விடுமுறை காலம் கிடைக்கும் அதை திட்டமிட்டு பலரும் சுற்றுலாவுக்கும், தங்களின் சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள்.
நீண்ட விடுமுறை
கடந்த வாரம் பொங்கல் விடுமுறை ஜன. 13ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நீண்டது. குறிப்பாக 5 நாள்கள். அதன்பின் இரண்டு வேலை நாள்களுக்கு பின் மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை வந்தது எனலாம். தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய அரசின் அலுவகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவையும் மதியம் 2.30 மணிக்கு பின்னரே இயங்கின. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நீண்ட பண்டிகைக்கு தமிழ்நாடு தயாராகிறது.
தைப்பூசம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், முருக பக்தர்கள் பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளை நோக்கி மட்டுமின்றி பல திருத்தலங்களை நோக்கி பக்தர்கள் நாளை படையெடுப்பார்கள். குறிப்பாக, பலரும் விரதம் இருந்து பாதயாத்திரையும் மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும், ரயில்கள், பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்துச் சேவைகளும் மிகவும் மக்கள் நெருக்கடி உடன் இயங்கும்.
மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிகள்!
ஜோதி தரிசனம்
அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமை குடியரசு தினம் என்பதால் அரசு விடுமுறை உள்ளது. அடுத்து சனி, ஞாயிறு என அடுத்தடுத்து மூன்று - நான்கு நாள்கள் விடுமுறை உள்ளது. பலரும் இந்த தினங்களில் ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுவோர் தங்களின் ஊருக்குச் சென்று திரும்பவும் திட்டமிடுவார்கள்.
அதில், குறிப்பாக, தைசப்பூச திருநாளில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்ய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறும். இதில் பங்கேற்க வள்ளலாரை பின்பற்றும் ஒவ்வொரும் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. விழுப்புரம் முதல் கடலூர் துறைமுகம் வரை செல்லும் பயணிகள் ரயில்கள் அடுத்த மூன்று நாள்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 25, ஜன. 26. ஜன. 27 என மூன்று விடுமுறை தினங்களை முன்னிட்டு இந்த ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு தொடங்கும் ரயில் (ரயில் எண் 06145) காலை 11.15 மணிக்கு கடலூர் துறைமுகத்தை எட்டும். இது விருத்தாச்சலம், உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி வழியாக செல்லும். அதே ரயில் (ரயில் எண் 06132) மீண்டும் மதியம் 3 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும் அனைத்தும் முன்பதிவில்லாத இருக்கை கொண்ட பெட்டிகளாகும்.
கடலூர் துறைமுகத்தில் இருந்து விருதாச்சலம் செல்லும் மற்றொரு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மூன்று தினங்களுக்கு அதே 8 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இந்த ரயில் செல்லும். இந்த ரயில் (ரயில் எண் 06146) கடலூர் துறைமுகத்தில் காலை 11.30 மணிக்கு புறப்படும் இந்த 12.35 மணிக்கு விருதாச்சலத்தை எட்டும். மீண்டும் மதியம் 1.25 மணிக்கு விருதாச்சலத்தில் இருந்து புறப்படும் அதே ரயில் (ரயில் எண் 06133) 2.40 மணிக்கு கடலூர் துறைமுகத்தை எட்டும். உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி இந்த ரயில் செல்லும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ