தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது.
அதேவேலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகம் உருவாகக் கூடும். லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
அதேப்போல் கேரளா, கடலோர கர்நாடகா-வின் பெரும்பாலான இடங்களிலும், இலட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளின் அனேக இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.