Tamil Nadu Rain Forecast Update: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (ஜூலை 12) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
ரெட் தக்காளி என்றால் என்ன?
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை போலவே மாநிலம் மிகுந்த மழை பெய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் குறிப்பிடும்போது, ரெட் தக்காளி எனும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். அதாவது மழை குறித்த வரைபடத்தை பார்க்கும்போது, அதிக மழையை குறிக்கும் சிவப்பு நிறம் படர்ந்து, தக்காளி போல் உருவத்தில் இருக்கும் அதைதான் ரெட் தக்காளி (Red Thakkali) என குறிப்பிடுகிறார்.
Red Thakkali will be delivered in KTCC in another 1-2 hours as Vellore storms moves towards the coast.
Did u notice, as the storms nears (pondy in north, Tondi in south) the coast, the get semma intense. Expecting a gusty night in KTCC with high intense rains and Damal Dumeels. pic.twitter.com/J5F827vbVb
— Tamil Nadu Weatherman (@praddy06) July 12, 2024
சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு
இந்த பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில், வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை (KTCC) ஆகிய மாவட்டங்களுக்கு இன்றிரவு ரெட் தக்காளி நகர்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இன்று இரவு மேற்குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிக இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
May I have your attention please, Train No. 12072024 from Vellore via Kancheepuram to KTCC, Red Thakkali Express is about to arrive in KTCC from platform number 9.00-9.30 pm, thank you.
— Tamil Nadu Weatherman (@praddy06) July 12, 2024
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த அருள்... யார் இவர்? - பின்னணி என்ன?
அடுத்த 3 மணிநேரத்திற்கான அலெர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 10.14 மணிக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்பரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 12, 2024
இன்றைய தமிழக நிலவரம்
முன்னதாக, இன்று காலையில் இருந்து மதுரை - சிவகங்கை - புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சுற்றியும் அதிக மழை இன்று பெய்துள்ளது. பந்தலூர் - தேவாலா - நீலகிரி மிக அதிக கனமழை பெய்துள்ளது. அதேபோல் வால்பாறையிலும் அதிக கனமழை பெய்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, டெல்டா பகுதிகளில் மிதமான மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மிதமான மழையும் பெய்துள்ளது.
இந்த இடங்களுக்கு போகாதீங்க...
அதுமட்டுமின்றி, வால்பாறை, வயநாடு, நீலகிரி (பந்தலூர்), குடகு உள்ளிட்ட மழை பிரதேசங்களுக்கு செல்வதை தடுக்கவும். குற்றாலத்தில் கூட வரும் நாள்களில் திடீரென வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றாலத்தில் குளிக்க தடை
மேலும், குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தம் காணப்படுகிறது. நீர்வரத்தின் அதிகரிப்பு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை
சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | “திமுகவுக்கு வெட்கமாயில்லையா..?” கருணாநிதியை கிழித்தெடுத்த சீமான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ