தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

Last Updated : Aug 18, 2019, 01:02 PM IST
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

பெரும்பாலான மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில்; தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், புதுவை, நாகை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை பொறுத்தவரை வேலூர் மாவட்டம்  ஆலங்காயத்தில்  15 சென்டிமீட்டர்,  திருப்பத்தூர் 10 சென்டிமீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 9  சென்டிமீட்டர், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மற்றும் புதுவையில் தலா 7  செண்டி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 2  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.

 

More Stories

Trending News