அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தி சென்னை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவிக்கையில்...
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும்.
- தென்கிழக்கு அரபிக்கடலில் வரும் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், பின்னர் அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்.
- தென் மேற்கு வங்க கடலில் வரும் 8-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். என குறிப்பிட்டுள்ளார்!