தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்றும் 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி, வட கடேலார மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாமாரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் பல லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமாரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் (Rain) தென் மாவட்டங்களில் பல இடங்களில் லேசான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!
அக்டோபர் 10 ஆம் தேதி, வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மழையுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மற்றும் 11 ஆம் தேதிகளில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வய்ப்புள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
இதற்கிடையில் அக்டோபர் 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
7, 8 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் கூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் (Fishermen) இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ: வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் மஸ்கட் நகரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR