தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் திறனை எப்படி மதிப்பிடுவது: EPS!

TNPSC முறைகேடு புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 8, 2020, 06:39 PM IST
தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் திறனை எப்படி மதிப்பிடுவது: EPS! title=

TNPSC முறைகேடு புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு ஊழியர்கள், 2 டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள், 2 இடைத்தரகர்கள், 9 தேர்வர்கள் மற்றும் ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 15 அரசு ஊழியர்கள், 3 காவலர்கள், 1 இடைத்தரகர், ஒரு கிராம நிர்வாக அலுவலர் என 20 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் மற்றும் மயிலாடுதுறை சேர்ந்த அரசு ஊழியர்கள் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்... பழங்குடியின சிறுவனை செருப்பை கழற்றிவிடுமாறு அமைச்சர் கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, வயது முதிர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் உள்நோக்கத்தோடு எதையும் செய்யவில்லை என்றார். இதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்துகள் என்றும், கட்சியின் கருத்து அல்ல என்றும் பதிலளித்த முதலமைச்சர், அவர் பக்திமான் என்று குறிப்பிட்டார்.

TNPSC தன்னாட்சி பெற்ற அமைப்பு. தேர்வில் முறைகேடு செய்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது TNPSC நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பு மீது பொத்தாம் பொதுவாக குறைக்கூறக்கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்துவது அவரது விருப்பம். 

இதை தொடர்ந்து அவர் பேசுகையில், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த முதலமைச்சரிடம், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என கேட்கப்பட்டது. எல்லா தேர்வுகளையும் ரத்து செய்து விட்டால் மாணவர்களின் திறனை மதிப்பிடுவது எப்படி என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Trending News