கோவில்களில் VIP தரிசனத்திற்கு விரைவில் தடை? அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்!

பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2022, 05:04 PM IST
  • திருகோவில்கள் VIP தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவாக்கியது அல்ல.
  • நாளடைவில் VIP தரிசனம் முடக்கப்படும்.
  • திருவண்ணாமலை தீபத்திற்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது.
கோவில்களில் VIP தரிசனத்திற்கு விரைவில் தடை? அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்! title=

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணையானர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘திமுக பொறுப்பேற்ற பிறகு மாதந்தோறும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் தலைமை மற்றும் ஆணையர் தலைமையில் 15வது சீராய்வு கூட்டம் நடைபெறும் வருகிறது; 2022 ஆண்டு 112 அறிவிப்புகளில் அதில் உள்ள 3761 பணிகள் குறித்தும், 2022 23 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட குறிப்புகள் குறித்தும், 1 கோடி ரூபாய்க்கு மேல் இடம் பெற்றிருந்த 112 அறிவிப்புகள் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு பணிக்கான உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார்.

மேலும் 22-23 ஆண்டுகளுக்கான அறிவிப்புகளும் பணி நடைபெறுகிறது, அதில் 3200 கோடி ரூபாய்க்கு இந்த 2 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்று இவ்வளவு பணிகள் மேற்கொண்ட காலம் தமிழக முதலமைச்சர் தளபதியின் அமைந்திருக்கக்கூடிய இந்த காலத்தில் தான். இன்றைய கூட்டத்தில், கூடுதலாக மருத்துவமனைகள், அன்னதானம் மற்றும் ஏற்கனவே செயல்பட்டுக் வந்திருக்கக்கூடிய ஒரு வேளை அன்ன தனம் குறித்தும் பேசப்பட்டது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சபரிமலை யாத்திரை 24 மணி நேரமும் தகவல் மையம் ஏற்படுத்தி சபரிமலையிலே தமிழ்நாடு சார்பில் அரசு அதிகாரிகளை இந்து சமய அறநிலைத்துறை நியமித்து, தமிழ்நாட்டில் வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி தருவதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது எனவும், திருவண்ணாமலை தீபத்திற்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது, 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலை தீபத்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , 16 தற்காலி பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, 400 தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தவர். 

மேலும் படிக்க | சபரிமலைக்கு போறீங்களா? தரிசனத்திற்கு இனி நோ டென்ஷன்

மேலும் 3739.40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்கப்பட்டு உள்ளது. 254 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்து சமய அறநிலை துறை சார்பில் இதுவரை 87 ஆயிரம் மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. அதில் மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும் நடபடும் எனவும் தெரிவித்தார். 

நிலங்களை மீட்கப்பட்டுள்ளது, நகைகள் மீட்டு உருக்கபட்டுள்ளது என்று வாய் வார்த்தையாக சொல்ல கூடாது ஆதாரத்தை வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் வி. பி. துரைசாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்கையில், தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல், நடிப்பவர்களை எழுப்ப முடியாது, இதுபோல தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்து சமய அறநிலை துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள் பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு காசி சங்கமம் குறித்த நிகழ்விற்கு அழைப்பு வரவில்லை, வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். 

திருகோவில்கள் VIP தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவாக்கியது அல்ல, நாளடைவில் VIP தரிசனம் முடக்கப்படும் பெரிய கோவில்களில் VIP தரிசனம் மற்றும், கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் முறையை அந்தந்த கோவில்களில் வருமானம் பொறுத்து படிப்படியாக குறைத்து கொள்ளப்படும். 

கோவில்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

மேலும் பாஜக தமிழகத்தில் பிசாசு மாறி வளர்ந்து வருகிறது என துரைமுருகன் பேசியுள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், அது ஒரு சைத்தான், இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

மேலும் படிக்க: கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News