கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2022, 10:47 PM IST
  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
  • மண்டல பூஜைகளுக்காக ஆலயம் திறக்கப்பட்டது
  • கார்த்திகை மாத பூஜைகள் தொடங்கின
கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது title=

பத்தனம்திட்டா: உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். "வெர்ச்சுவல் கியூ" மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை நவம்பர் 16ம் தேதி  மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது 

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில்  மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.  அதன் பிறகு, உபதெய்வ கோவில்களில் தீபங்கள் ஏற்றப்படும்.  பின் மேல்சாந்தி 18ம் படி முன் உள்ள பள்ளத்தில் அக்னியை  ஊற்ற,  பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

மேலும் படிக்க | சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குப் புது கட்டுப்பாடு

இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்த  பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி துவங்கும். தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள் இருக்காது.  சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழா 16ம் தேதியான நேற்று மாலை நடந்தது.

விருச்சிக ராசிக்கு முதல் நாளான நவம்பர் 17ம் தேதியான இன்று முதல் சபரிமலை மற்றும் மாளிகைப் புறம் ஆகிய  இரு கோவில்களையும் புதிய மேல்சாந்திகள் திறப்பார். மண்டல திருவிழா காலம் நவம்பர் 17  இன்றுமுதல் டிசம்பர் 27 வரை நடக்கும். டிசம்பர் 27ல் மண்டல பூஜை நடந்து முடிந்ததும் நடை அடைக்கப்படும்.

மேலும் படிக்க | சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

தொடர்ந்து  மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.   ஜனவரி 20ம் தேதி முதல் விளக்கு பூஜைகாலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழக்கமாக கார்த்திகை மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள், மாலை போட்டு விரதம் இருந்து, ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது? அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News