Chennai Rains: வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த நவ. 28ஆம் தேதி காலை 8.30 மணியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது" என குறிப்பிட்டிருந்தது.
டிச.2ஆம் தேதி புயல்?!
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.30ஆம் தேதி (இன்று) அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் டிச.2ஆம் தேதி அன்று புயலாக (Cyclone) வலுப்பெற கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வட இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இன்று (நவ. 30) தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததன.
மேலும் படிக்க | உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்
நேற்றிரவு போக்குவரத்து நெரிசல்
செம்பரம்பாக்கம் (Chembarambakkam) நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியேறுவதால் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று மாலையில் இருந்து சென்னை மாநாகரின் பல பகுதிகளில் மழை பெய்து வந்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேக்கமடைந்தது.
இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவார் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக இருச்சக்கர வாகனம், கார் போன்ற தனிப்பட்ட வாகனங்களில் சென்றோரும் சரி, பேருந்தில் சென்றவர்களும் சரி பல மணிநேரங்கள் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மிக தாமதமாக வீடு திரும்பியதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டிருந்தனர்.
எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு?
இந்த நிலையில், இன்று காலை சற்று வெயில் அடித்ததால் மழைநீர் வடிந்து இயல்பு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் காலை 8 மணியளவில் மீண்டும் மழை மேகங்கள் சென்னையை சூழ்ந்தன. சரியாக 8.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் மழைநீர் தேக்கம் மீண்டும் தலைவலியை கொடுக்க தொடங்கி உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2023
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக (நண்பகல் 11,12, 1 மணி வரை) சென்னையை சுற்றிய எந்தெந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,"செங்கல்பட்டு, கிண்டி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பல்லாவரம், ஆலந்தூர், மாம்பலம், தாம்பரம், உத்திரமேரூர், ஊத்துக்கோட்டை, வண்டலூர், குன்றத்தூர், பள்ளிப்பட்டு, , எழும்பூர், கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், பெரம்பூர், புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தண்டையார்பேட்டை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருத்தணி, அமைந்தக்கரை, அயனாவரம், பூவிருந்தவல்லி, அம்பத்தூர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நினைவுக்கு வந்த 2015'
இதுகுறித்து சென்னை வேதர்மேன் (Chennai Weatherman) அவரது X பக்கத்தில், "சென்னையில் அலுவலகம் செல்லும் சரியான நேரத்தில், மழை மீண்டும் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 8.30 மணிக்கு கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி, பின்னர் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவும்.
Chennai Nowcast Rain update, Office Going time rains to start
---------------------
At perfect office going time, the rains will be back in Chennai, ECR, OMR, Tiruvallur district by 8.30 am rains should commence in areas close to sea and then spread over to other parts of city pic.twitter.com/O8m6TXgmfM— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2023
செம்பரம்பாக்கத்தில் தற்போது 6000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரமும் தற்போது உபரியாக உள்ளது. 2015ஆம் ஆண்டில் நவ. 23ஆம் தேதி அன்று இதேபோல் 100-150 மிமீ மழை பெய்தபோது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் பாதிப்பு, நேற்றைய போக்குவரத்து நெரிசலின்போது நினைவுக்கு கொண்டு வந்தது" என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ