ஆண்டுதோறும் சேலத்தில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் விழா துவங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி மாரியம்மன் , காளியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கி சிறப்பு பெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றன. செவ்வாபேட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வரும் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
உடலில் கத்தி வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை உடலில் குத்திக்கொண்டு ஜேசிபி வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களில் பக்தர்கள் அந்தரத்தில் தொடங்கியபடி அழகு குத்திக்கொண்டு சென்ற காட்சி காண்போரை மெய்சிலிக்க வைத்தது.
மேலும் படிக்க | ஆடித்தபசு திருவிழா: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் தேரோட்டம்
இதேபோன்று , கருங்கல்பட்டி புத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திருக்கோவிலில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அம்மனுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆடித்திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்
மேலும் படிக்க | சனியின் ‘வக்ர’ பெயர்ச்சியால் வெற்றியை ருசிக்க போகும் சில ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ