INX மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் அவரது வீட்டில் சிந்தனைச் சிரிப்பைக் கேட்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்து விட, உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம்.
இன்று காலை ப.சிதம்பரத்தை
அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்;
சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்.@PChidambaram_IN pic.twitter.com/PQ0urKX5XN— வைரமுத்து (@vairamuthu) December 8, 2019
இந்த மேல்முறையீட்டு மனுவை டிசம்பர் 4-ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர். இதனைத்தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்ததை அவரது ஆதரவாளர்களும் கட்சித்தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இச்சந்திப்பினை தொடர்ந்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., " இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.