நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தனித்து போட்டியிடலாமா என நினைக்கிறேன் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்...!
நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தனித்து போட்டியிடலாமா என நினைக்கிறேன் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஊழல் குற்றச்சாட்டினை நிரூபிக்கட்டும் அதற்கு பிறகு ஆளும் கட்சியைப் பற்றி விமர்சிக்கலாம். இடைத்தேர்தல் பற்றி கட்சியினரோடு கலந்து பேசி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும். டிஜிபி வீட்டில் ரெய்டு என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இது ஒரு பயமுறுத்தும் செயலோ என எண்ணத் தோன்றுகிறது. குற்றவாளிகள் என்று 7 பேரை அறிவித்தாலும் கூட அவர்கள் தண்டனையை அனுபவித்து உள்ளனர். எனவே அவர்களை விடுப்பதில் தவறு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தனித்து போட்டியிடலாம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.