இதுவரை தனக்கு பாதுகாப்பு அளித்த சி.ஆர்.பி.எப் ., வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ஆகியோருக்கு பாதுகாவலாக இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு “ஒய்+” வகுப்பு (Y+) பாதுகாப்பும், அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு “இசட்+” (Z+) பாதுகாப்பு இருந்தது. இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF - சிஆர்பிஎஃப்) கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வந்தது. நாடு முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் விஐபி பாதுகாப்பை துணை ராணுவ இயக்கம் மூலம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
கடந்த 6 ஆம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது. அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட "இசட் பிரிவு" பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு இணையான பாதுகாப்பை தமிழக போலீஸ் தரப்பில் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த துணைராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரை தனக்கு பாதுகாப்பு அளித்த சி.ஆர்.பி.எப் ., வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது வெளியிட்டுள்ள டிவீட் பதிவில்,
கடந்த பல ஆண்டுகளாக எனக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கிய ஒவ்வொரு சிஆர்பிஎப் வீரருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுபவர்களிடம் இருந்து பல்கலை.,கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
I wholeheartedly thank each and every one of the @crpfindia personnel for providing security cover for me over the past many years.
I urge the Govt to utilize CRPF personnel to protect universities and students from those perpetrating violence in the name of religion.
— M.K.Stalin (@mkstalin) January 10, 2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.