IMD Updates: அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படாது. அதே நேரத்தில், இந்தியாவின் தென் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் அக்டோபர் 30 வரை கனமழை பெய்யும் என கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது
அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தென் மாநிலங்களில் ஆரம்பமாகியுள்ளது. அதே சமயம் தமிழகக் கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு புயல் சுழற்சி உருவாகி இருக்கிறது. அது வடக்கு மியான்மர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு புயல் சுழற்சி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்
அதே நேரத்தில், வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் படி, இன்று தமிழகம், கேரளா, ஆந்திராவின் தெற்கு கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம், வடகிழக்கு இந்தியாவில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தென் மாநிலங்களில் மழை படிப்படியாக தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - Onion Prices Hike: விண்ணைத் தொடும் வெங்காயம் விலை! 2 மாதம் ஆகும் விலை குறைய?
இன்றைய வானிலை அறிக்கை: தமிழ்நாடு - புதுச்சேரி
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre -Chennai) தெரிவித்துள்ளது.
நாளைய வானிலை அறிக்கை: தமிழ்நாடு - புதுச்சேரி
நாளை (29.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
மேலும் படிக்க - மழை காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த முறையை பின்பற்றுங்கள்! துர்நாற்றம் வராது!
மீனவர்களுக்கு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்பட வில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது
4 சென்டிமீட்டர்: குருந்தன்கோடு (கன்னியாகுமரி) ,
3 சென்டிமீட்டர்: முக்கடல் அணை (கன்னியாகுமரி), நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்)
2 சென்டிமீட்டர்: மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), கரியகோவில் அணை (சேலம்), சிதம்பரம் (கடலூர்)
1 சென்டிமீட்டர்: சிங்கம்புணரி (சிவகங்கை), ஆயின்குடி (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), சிதம்பரம் AWS (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), தக்கலை (கன்னியாகுமரி)
மேலும் படிக்க - கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ