பட்டுகோட்டையில் உள்ள நேரு நகரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர், சலீம் என்பவர் ஜூன் 29 அன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். சலீமிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, ஜூலை 20 அன்று பட்டுகோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தபப்ட்டது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சலீமிற்கு சுவாசப் பிரச்சினைகள் மேலும் அதிகரித்ததன் காரணமாக, ஜூலை 29 அதிகாலை 4 மணியளவில் அவர் இறந்தார், அதே நாள் மாலை 4 மணியளவில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டுகோட்டையில் உள்ள ஒரு மசூதியில் மாலை 6 மணியளவில் சலீம் அடக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சலீமின் மனைவி ஷர்மிளா, சலீமின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக சந்தேகிப்பதாக, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர். கோவிட் -19 நோயால் இறந்த நபர்களின் பட்டியலில் சலீமின் பெயர் இல்லாததாலும், உடலை ஒப்படைப்பதில் 12 மணி நேர தாமதம் ஆனதால், அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
மனுவின் அடிப்படையில், பட்டுகோட்டை தாசில்தார் தரனிகா முன்னிலையில் சலீமின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே மற்றொரு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். புதிய பிரேத பரிசோதனை அறிக்கை தாசில்தாரிடம் சமர்ப்பிக்கப்படும். அதை அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ | குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR