இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 3 நாட்கள் டெல்டா பகுதியில் மழை!

டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2018, 12:18 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 3 நாட்கள் டெல்டா பகுதியில் மழை!  title=

டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை காலங்களில் வீசும் கிழக்கு திசைக்காற்று ஆகியவற்றின் காரணமாக இந்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருகிறது. இதனால் டிசம்பர்  4, 5 ஆம் தேதிகளில் கடலோர மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 4, 5, 6 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

 

Trending News