தமிழகத்தில் அடுத்தமாதம் பிளஸ்-2, 10-ம் வகுப்புகளுக்கு தேர்வும் அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்கப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 61,000 மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தாண்டு மாணவர்கள் 5,08,626, மாணவிகள் 5,02,465, திருநங்கைகள் 5 பேரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
அரசு தேர்வுகளை எவ்வித குழப்பமும் இல்லாமலும், முறைகேட்டிற்கு இடம் அளிக்காமலும் நடந்த பள்ளிக் கல்வித்துறை அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுதல், கண்காணிப்பாளர்களே முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சம்பவங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்துள்ளதையொட்டி சரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் அண்ணா நூலுகத்தில் இன்று நடந்தது.
அப்போது பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:- நாட்டிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
>மாணவர் உயிரிழந்தால் ரூ.1 லட்சம், படுகாயமடைந்தால் காயத்துக்கு ஏற்ப காப்பீடு வழங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
>தமிழகத்தில் மொத்தம் 3,560 மையங்களிலும், புதுச்சேரியில் 48 மையங்களிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
>இந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 4,01,507, மாணவிகள் 4,60,406 மாணவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
>பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க 10 கிலோ மீட்டருக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். தூரத்தை கணக்கில் கொண்டு இந்த முறை கூடுதலாக 516 மையங்கள் அமைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
>இந்தியாவிலேயே வியக்கத்தக்க வகையிலும் சி.பி.எஸ்.இ.,-ஐ மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் யோகா பயிற்சி, அரை மணி நேரம் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
>பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய மக்கள் தொகை குறைவே காரணம். தொடக்கக்கல்வியில் மாற்றங்கள் வரும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளிகளில் அசம்பாவிதத்தை தவிர்க்க மாணவர், ஆசிரியருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என்றார்.