தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்......

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்! 

Last Updated : Nov 26, 2018, 09:51 AM IST
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்...... title=

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்! 

சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88) இன்று வயது முதுமையால் காலமானார். இவர் கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை உலகளவில் பாராட்டை பெற்றது. இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம்  எனது தனது ஆய்வுக் கட்டுரையில் ஐராவதம் மகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியமானவை. அந்த ஆய்வுக் கட்டுரையில், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம். இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஐராவதம் மகாதேவன் இன்று அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர்  கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News