5 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது: கனிமொழி

5, 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 29, 2020, 08:52 AM IST
5 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது: கனிமொழி  title=

5, 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

5, 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் பேட்டி அளித்தபோது.,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் ஒரு இடத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. எனவே, இங்கு கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பது அவசியமானது. இது இப்பகுதி வளர்ச்சி அடையவும் உதவும். 

5, 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். இதனை அரசு மூர்க்கத்தனமாக, கட்டாயமாக திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையே பலரும் எதிர்த்து வரும் நிலையில், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Trending News