தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாதுரை மற்றும் அவரிடம் பணிபுரிந்த ஊழியர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வந்த சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (ஜுலை-16) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள செய்யாதுரை, அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை என 30-க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் பணமாக ரூ.168 கோடியும், 103 கிலோ தங்கமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாதுரை சொந்தமான நிறுவனத்தில் இயக்குனரராக இருக்கும் சுப்ரமணியம் பழனிசாமியின் மகள் (திவ்யா) தான் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் முத்து குமாரின் மனைவி ஆவார் என்பது கூடுதல் தகவல்.