படங்களை பெரிய திரையில் பார்ப்பதற்காக அப்போது மக்கள் திரையரங்கிற்கு படையெடுத்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, டிஸ்னி ஹாட்ஸ்டார், லயன்ஸ் கேட் போன்ற பல ஓடிடி தளங்கள் இப்போது பிரபலமாகி விட்டன. இதில், கணக்கிலடங்கா படங்களும் தொடர்களும் டாக்குமெண்டரிகளும் உள்ளன. மேற்கூறிய தளங்களில் வாராவாரம் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளிவருவது வழக்கம். சரி, இந்த வாரம் எந்தெந்த தளத்தில் என்னென்ன தொடர்கள் வெளியாகிறது தெரியுமா?
அசுர் 2:
இந்தி திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களுள் ஒன்று, அசுர் (asur). மகாபாரத அரக்கன், மகாபாரத கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் போன்ற அம்சங்களை தீமாக வைத்து பரபரப்பான க்ரைம் த்ரில்லராக எடுக்கப்பட்ட தொடர் இது. இதில், பருன் சோப்தி, ஏமி வேக் போன்றோர் நடித்துள்ளனர். பரபரப்பான திருப்பத்துடன் முடிந்த இந்த சீரியலின் கடைசி சீசனின் தொடர்ச்சியாக இதன் சீசன் 2 வெளியாக உள்ளது. ஓனி சென் இயக்கியுள்ள இந்த தொடர், இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா தளத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஸ்கூப்:
பரபரப்பான க்ரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள தொடர், உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் பல்வேறு திருப்பங்கள் இருக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர், நெஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் 2ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இந்த தொடரி ஹன்சல் மெஹ்தா இயக்கியுள்ளார்.
ஏ பியூடிஃபுல் லைஃப் (A beautiful life)
நம்மை அசரவைக்க தயங்காத திரையுலகமாக திகழ்கிறது, ஹாலிவுட். அப்படி அசரவைக்கும் கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ஏ பியூடிஃபுல் லைஃப். காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், நெஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி வெளியாகிறது.
ஸ்கூல் ஆஃப் லைஸ்:
தொலைந்து போன ஒரு பள்ளி மாணவனுக்கு என்ன ஆனது என்ற ஒன்லைன் ஸ்டோரியை அடிப்படையாக கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன அந்த மாணவனை எப்படி அவன் படித்த பள்ளியும் காவல் துறையினரும் கண்டுபிடிக்கின்றனர் என்பதுதான் இந்த சீரிஸின் அடிப்படை அம்சம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 2ஆம் தேதி இத்தொடர் வெளியாகவுள்ளது. இந்தியில் உருவாகவுள்ள இந்த தொடரை அவினாஷ் அருண் இயக்கியுள்ளார்.
ஹட்யாபுரி:
பெங்காலி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தொடர், ஹட்யாபூரி. ஓய்விற்காக ஊருக்கு செல்லும் காவல் அதிகாரியை அங்கேயும் விடாமல் கொலை வழக்கு ஒன்று தொடர்கிறது. இந்த கதை தொடராக எடுக்கப்பட்டுள்ளது. இது, ஜீ 5 தளத்தில் ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது.
மும்பை கார்:
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆக மும்பை கார் (Mumbaikar) எனும் படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படம், ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டுள்ளனர். ஜியோ சினிமா தளத்தில் இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம், தமிழிலும் டப் செயப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ