Pongal Parisu 2024: அடித்தது ஜாக்பாட்... பொங்கல் பரிசுடன் ரொக்கமும்... உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!

Pongal Parisu Thoguppu 2024: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2024, 02:49 PM IST
  • பொங்கல் பரிசு தொகுப்பு ஏற்கெனவே அறிவிப்பு
  • தற்போது ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படுகிறது.
  • உரிமைத் தொகை மாதம் 15ஆம் தேதிக்கு வந்துவிடும்.
Pongal Parisu 2024: அடித்தது ஜாக்பாட்... பொங்கல் பரிசுடன் ரொக்கமும்... உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்! title=

TN Govt Announced Pongal Parisu Thoguppu 2024: பொங்கல்  பரிசுடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,"தமிழர்களின்‌ அடையாளமாக அனைத்துத்‌ தரப்பு மக்களாலும்‌ சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டு வரும்‌ பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல்‌ திருநாளாகும்‌.

பொங்கல் தொகுப்பு அறிவிப்பு 

இந்த நன்னாள்‌ அனைத்துத்‌ தொழில்களுக்கும்‌, ஏன்‌, மனித குலத்திற்கே அடித்தளமாய்‌ விளங்கி, உணவளித்து வரும்‌ விவசாயப்‌ பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும்‌ ஒரு நாளாகவும்‌ தமிழர்களாகிய அனைவராலும்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பாக வழங்கப்படும்‌ என்று கடந்த ஜன.2ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. 

மேலும் படிக்க | சென்னை மக்கள் கவனத்திற்கு... முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - என்ன காரணம்?

மேலும்‌, முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால்‌, பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலைகள்‌ அனைத்தும்‌ தயார்‌ செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்புடன்‌ சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத்‌ தேவையான அனைத்து ஏற்பாடுகளும்‌ செய்யப்பட்டுள்ளன.

உரிமைத் தொகை அப்டேட்

இந்நிலையில்‌, பொங்கல்‌ திருநாளைச்‌ சிறப்பாக மக்கள்‌ கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள்‌, வருமான வரி செலுத்துவோர்‌, பொதுத்‌ துறை நிறுவனங்களில்‌ பணிபுரிவோர்‌, சர்க்கரை அட்டைதாரர்கள்‌, பொருளில்லா அட்டைதாரர்கள்‌ தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள்‌ அனைவருக்கும்‌ 1,000
ரூபாய்‌ பொங்கல்‌ பரிசாக நியாயவிலைக்‌ கடைகளில்‌ பொங்கல்‌ திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவித்துள்ளார்‌.

மேலும்‌, பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும்‌ 15ஆம்‌ தேதி வழங்கப்பட்டு வரும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகையினை, இந்த மாதம்‌ பொங்கல்‌ திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும்‌ 10ஆம்‌ தேதியன்றே, மகளிர்‌ உரிமைத்‌ தொகை பெற்றுவரும்‌ 1 கோடியே 15 இலட்சம்‌ மகளிரின்‌ வங்கிக்‌ கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்‌ என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News