Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,"ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லாமல் வெறும் வாக்குகள் மட்டும் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. பேனர் விவகாரம் தெரியாமல் ஏற்பட்ட எழுத்துபிழை" என விளக்கமளித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளர் அறிவித்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "நாங்கள் தான் அதிமுக, அவர் ஒரு மண்குதிரை" என பதிலளதித்தார். கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் மீனவர்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்த ஜெயக்குமார், பேனா நினைவுச் சின்னத்தை அண்ணா அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளலாம்" என்றார்.
மேலும் படிக்க | கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?
பாஜக வேட்பாளர் அறிவித்தால் ஓ. பன்னீர்செல்வம், தங்களது வேட்பாளர்களை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவிக்கும் நிலையில், தங்களது வேட்பாளரை திரும்பி பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,"நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்" என்றார்.
முன்னதாக, நடைபெற இருக்கும் ஈரோடு இடைத்தேர்தலுக்கு, திமுக கூட்டணி, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்டவற்றின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுக தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பிலும் தலா ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சின்னம் தொடர்பான பிரச்னை இருந்த நிலையில், அதிமுக கூட்டணி தரப்பில் பாஜக போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், முதல் ஆளாக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். பாஜக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினால், தங்களது வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொள்வோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக இன்னும் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், அதிமுக இரு தரப்பிடையே குழப்பம் நிலவுவதாக கூறப்பட்டது. தற்போது, ஜெயகுமாரின் இந்த கூற்று, இபிஎஸ் தரப்பு போட்டியை உறுதிசெய்துள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத பட்ஜெட்! விசிக கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ