சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது. நோய் தொற்றால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருந்தார். மூச்சு விடுவதில் சிரப்பட்டு வந்தார். நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது. இதனால் பாதிப்பு அதிகமானது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கமில்லை.ஜெயலலிதாவுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை.ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடன் தான் வந்தார். பின்னர் மருத்துவமனையில் ஒரு வார காலத்தில் எழுந்து பேசினார். உணவு உட்கொண்டார்.
முதன்முறை ஆளுநர் மருத்துவமனைக்கு வந்த போது, அவரிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்ப்டடது. இரண்டாவது முறையாக வந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தார்.
தினந்தோறும் சசிகலா, தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5.5 கோடி செலவானது. ஜெயலலிதா டிவி பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை. ஜெயலலிதா டிச. 5-ம் தேதி தான் மரணம் அடைந்தார்.
இவ்வாறு கூறியுள்ளார்.