தமிழின படுகொலை... ட்விட்டரில் ட்ரெண்டாகும் JusticeForTamilGenocide ஹேஷ்டேக்

இன படுகொலை குறித்து ட்விட்டரில் justiceForTamilGenocide ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 18, 2022, 05:10 PM IST
  • தமிழ் இன அழிப்பு நாள்
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
தமிழின படுகொலை... ட்விட்டரில் ட்ரெண்டாகும் JusticeForTamilGenocide ஹேஷ்டேக் title=

ஈழத்தில் நடந்த படுகொலை நினைவுதினம் அனுசரிக்கப்படும் சூழலில் ட்விட்டரில் #JusticeForTamilGenocide என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் அமைப்பு போராடியது. ஆனால் பல நாடுகளின் தூணையோடு கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் அந்த அமைப்பை தோற்கடித்தது.

ஆனால் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இலங்கை போர் விதிகளை மீறிவிட்டது, அப்பாவி குழந்தைகளைக்கூட கொன்றிருக்கிறது என பலர் கூறுகின்றனர்.

Trending

இறுதிப்போரின்போது தமிழர்களை ஈவிரக்கமின்றி இலங்கை ராணுவம் கொன்றொழித்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி வருடாவருடம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்துவர்.

மேலும் படிக்க | ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அந்தவகையில் இந்த வருடமும் பலர் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் #JusticeForTamilGenocide என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News