ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 40 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நிதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குறிப்பிடுகையில்., ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.
ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2019
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.