வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது: திருமாவளவன்

Thirumavalavan: திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2023, 02:56 PM IST
  • தமிழகத்தில் வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றச்சாட்டு.
  • வன்முறை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜகவினர் வழக்கு பதிவு செய்வதில் காவல்துறை மெத்தனம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.
வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது: திருமாவளவன் title=

சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பேட்டியளித்தார். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடையக் கூடிய வகையில் பாஜக செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தமிழக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கி ஒரு வெறுப்பு அரசியலை வட மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் உருவாக்கிட பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம் அவர் குறினார். 

ஆரணியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு பேரை கைது செய்ய காவல்துறையினர் ஏழு தனிப்படை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வேங்கை வயல் விவகாரத்தில் சி பி சி டி போலீசார் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள மக்களையே விசாரிப்பதாக தகவல் வந்த நிலையில் அது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்ததாக கூறினார்.

மேலும் படிக்க | கனமழையினால் 20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி! தெப்பம் விட்டு வழிபட்ட மக்கள்!

பாஜகவினர் தங்களது வீடுகள் தங்களது கார்களை அவர்களே சேதப்படுத்திக் கொண்டு அவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்ததாக கூறி குற்றம் சாட்டுவதாக திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 32 ஆண்டுகளாக அரசியலில் நெருக்கடியை சந்தித்து வந்துள்ள நிலையில் தற்போது அது வெற்றியாக இருக்கும் நிலையிலும் பாஜக தொண்டர்கள் மூலம் விசிகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News