திடீர் மருத்துவ ஓய்வில் செல்லும் கமல்ஹாசன்; காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதன் காரணமாக வரும் சில தினங்களுக்கு அவர் மருத்து ஓய்வில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 21, 2019, 11:31 AM IST
  • கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
திடீர் மருத்துவ ஓய்வில் செல்லும் கமல்ஹாசன்; காரணம் என்ன? title=

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதன் காரணமாக வரும் சில தினங்களுக்கு அவர் மருத்து ஓய்வில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடுகையில்.,  "கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொறுத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்த தொடர் வேலைபளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனையின் படி நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வரும் 22/11/2019 அன்று அக்கம்பினய அகற்றும் சிகிச்சை மேற்கொளப்பட இருக்கிறது.

சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப்பின் நம்மவர் நம்மை சந்திப்பார் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப் படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News