ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்: கனிமொழி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2019, 05:42 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்: கனிமொழி title=

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இன்று இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்து. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பை தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியாதவது, 

#Sterlite ஆலையை திறக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி இது. இனி அடுத்த கட்ட சட்டப்போராட்டம் உயர்நீதிமன்றத்தில் நடக்கும். அங்கும் வெற்றி கிடைக்கட்டும். 

இந்த தற்காலிகமாக நிம்மதிக்காக தமிழர்கள் கொடுத்த விலை 14 உயிர்கள் எனக் கூறியுள்ளார்.

Trending News