மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே கோட்ட வளாகத்தில் உள்ள வைகை இல்லத்தில் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில்;-
"தமிழகத்தில் எந்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்பதை சொல்ல வேண்டும், மத்திய அரசின் தமிழகத்திற்கான நிதி குறைந்திருக்கிறது, ஒரு ரூபாய்க்கு 28 பைசா தான் வழங்குகிறார்கள், தமிழகத்தில் எந்த திட்டத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதனை செயல்படுத்தவில்லை என்பதை பிரதமர் தெளிவாக சொல்ல வேண்டும்,
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசையில் நினைத்து பேசியுள்ளார்,
மேலும் படிக்க | திமுக மீது காங்கிரஸ் மனக்கசப்பு - லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஆலோசனை?
கீழ்மட்ட அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள், திமுக காணாமல் போகும் என பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி நிறைய பேசுவார்., தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேறூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அதனை நீக்க முடியாது,
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தொடர்பான கேள்விக்கு SOUND AND FURY என்பது போல நிறைய சத்தம் இருக்கு ஆனால் செயல்பாடு இல்லை. எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டர் பாஜகவில் இணையவுள்ளதாக கூறியது குறித்த கேள்விக்கு : பாஜக கூறிய 15 லட்சம் போல தான் அதுவும், தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள், பாஜகவின் நிலை வாக்கு எண்ணும் போது தான் உண்மையான நிலை தெரியும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங் கூட்டணி 39 இடங்களில் வெல்லும்" என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ