வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று இரவு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்படும். அதன் பிறகு சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும். அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு உடல் கொண்டு வரப்படும். அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, காவேரி மருத்துவமனையில் இருந்து சாலைகளின் இருபுறமும் தொண்டர்கள் சூழ திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு உள்ளது.
முன்னதால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்த கோபாலபுறம் வந்துள்ளார்.
Chennai: Rajinikanth arrives at #Karunanidhi's Gopalapuram residence where the DMK chief's mortal remains are kept pic.twitter.com/62n4socdH5
— ANI (@ANI) August 7, 2018
West Bengal Chief Minister Mamata Banerjee with MK Stalin and Kanimozhi at Gopalapuram in Chennai. #Karunanidhi pic.twitter.com/GcbbTW0C7N
— ANI (@ANI) August 7, 2018